Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Monday, December 14, 2015

மீண்டும் வருவாய் என காத்திருக்கிறேன்!

உன்னை கையில் ஏந்தவில்லை..
கட்டி அணைக்கவில்லை..
உன் பட்டு போன்ற கைகள் என்னை தீண்டவில்லை..
உன் பிஞ்சு கால்களில் முத்தமிடவில்லை..
என் பால் மடியும் சுரக்கவில்லை..
என்ன துர்பாக்கியம் செய்தேனோ
என்னை நீங்கிச் சென்றாய்..
என் உயிரே என் செல்வமே
என்னை விட்டுப் பிரிந்தாய்..
என்றும் மறவேன் உன்னை
என் நெஞ்சில் அழியா வண்ணச் சித்திரமாய்..
மீண்டும் வருவாய் என காத்திருக்கிறேன்..
எனை தாயென முழுமையடையச் செய்வாய் என காத்திருக்கிறேன்..!!!

~ பிரியங்கா செல்வகுமார்

Wednesday, January 9, 2013

Dhevathai avalo? / தேவதை அவளோ?

பெண்ணின் கையும் 
விழியின் மையும்..
மாயம் செய்யும் 
பேச்சின் மெய்யும்..!

கனிரசம் சொட்டும் 
ரோஜா இதழும்..
வைரம் பூட்டிட 
நீண்ட கழுத்தும்..!

புல்லாங்குழலாய்
ஐயிரு விரலும்..
மெழுகை ஒத்த 
அவ்விரல்களின் நகமும்..!

தரை தொடும் நீண்ட 
காரிருள் மயிரும்..
இனித்திடும் கனியாய் 
மாதுளை மார்பும்..!

அரவம் தோற்க 
வளையும் இடையும்..
மறைத்திடும் மெல்லிய 
அவளின் உடையும்..!

நரகம் தூற்றி 
சொர்க்கம் செய்யும்..
தாமரை நானும் 
சிவந்த கால்களும்..!

மயிலும் வியக்கும்
மின்னல் அழகும்..
கற்பின் இலக்கணம் 
கண்ணகி நடையும்..!!

பெண்ணா இவள்?
அட பெண்ணா இவள்???

பிரம்மன் களஞ்சியம் மிகை இவள்தானோ?
என் கண்ணில் விழுந்தவள் இவள்தான் யாரோ??

                                                                                          - Love :-)

Wednesday, March 14, 2012

Engum nee! Ethilum nee!! / எங்கும் நீ! எதிலும் நீ!!


கனவில் ஒரு கண்ணாடி..
விழுந்தது உன் முன்னாடி..
நூறு முகம் அம்மாடி..
அழகு ஒரு தேவதை!

தனிமையில் நான் இருக்கையிலே..
உன் நினைவு என்னை இடிக்கையிலே..
எனை மறந்து சிரிக்கையிலே..
நொடிகள் அது மந்திரம்!

நூறு யுகம் உன்னோடு..
வாழ்ந்து விட்டேன் நெஞ்சோடு..
உலகம் உன்தன் விழியோடு..
நாட்கள் அது ஓவியம்!

உன் அன்பு எனக்கெனதாய்..
என் நாட்கள் உனக்கெனதாய்..
நம் காதல் நமக்கெனதாய்..
காலம் அது கவிதை!

உயிர் உருகி நின்றோம்..
நமை பிரிய மறந்தோம்..
கலவியிலும் கலந்தோம்..
காதல் அது தெய்வீகம்!

மரணத்தின் ஒலியே..
விதி செய்த சதியே..
எனை பிரிந்தாய் ரதியே..
நினைவு அது போராட்டம்!

கனவுகள் தந்தாய் மந்திரம் செய்தாய்..
ஓவியம் வரைந்து கவிதைகள் சொன்னாய்..
வலியுடன் வாழ கற்றும் தந்தாய்..
நம் வாழ்க்கை அது காவியம்!

                                                                      எங்கும் நீ! எதிலும் நீ!!
                                                                      அன்புடன் என்றும் உனக்கென நான்!!
                                                                                        - Love you Kutti...

Tuesday, July 19, 2011

கனவே வாழ்வா?/KANAVE VAAZHVA?



எனையே பார்க்கும் உன் கண்கள் இல்லை!
          மயிலின் நடனம் பிடிக்கவில்லை!!
அலையென பாயும் உன் கூந்தல் இல்லை!
          கடலின் அலையும் பிடிக்கவில்லை!!
பட்டுபோல் தீண்டும் உன் விரல்கள் இல்லை!
          பட்டுப் பூச்சியும் பிடிக்கவில்லை!!
பிடித்துச் செல்ல உன் கைகள் இல்லை!
          கடற்கரை நடையும் பிடிக்கவில்லை!!
உன் உளறல் சத்தம் அருகில் இல்லை!
          பேருந்து பயணம் பிடிக்கவில்லை!!
உன் இரவுப் பேச்சு கேட்கவில்லை!
          இரவே எனக்கு பிடிக்கவில்லை!!
படுத்து உறங்க உன்மடி இல்லை!
          உறக்கம் கூட பிடிக்கவில்லை!!
உயிரென கலந்த நீயும் இல்லை!
          உலகம் எதுவும் பிடிக்கவில்லை!!
பிடிக்கவில்லை எனக்கு பிடிக்கவே இல்லை!
          நீ கனவில் வருவது பிடிக்கவில்லை!!
கனவில் மட்டும் என்னுடன் வாழ
          கனவே எந்தன் வாழ்வா என்ன?

************************************************

enayae paarkum un kangal illai!
        mayilin nadanam pidikkavillai!!
alaiyena paayum un koonthal illai!
        kadalin alaiyum pidikkavillai!!
pattupol theendum un viralgal illai!
        pattu poochiyum pidikkavillai!!
pidithu chella un kaigal illai!
        kadarkarai nadaiyum pidikkavillai!!
un ularal sattham arugil illai!
        perunthu payanam pidikkavillai!!
un iravu pechu ketkavillai!
        irave enakku pidikkavillai!!
padutthu uranga unmadi illai!
        urakkam kooda pidikkavillai!!
uyirena kalantha neeyum illai!
        ulagam ethuvum pidikkavillai!!
pidikkavillai enakku pidikkave illai!
        nee kanavil varuvathu pidikkavillai!!
kanavil mattum ennudan vaazha
        kanave enthan vaazhva enna?