Tuesday, July 19, 2011

கனவே வாழ்வா?/KANAVE VAAZHVA?



எனையே பார்க்கும் உன் கண்கள் இல்லை!
          மயிலின் நடனம் பிடிக்கவில்லை!!
அலையென பாயும் உன் கூந்தல் இல்லை!
          கடலின் அலையும் பிடிக்கவில்லை!!
பட்டுபோல் தீண்டும் உன் விரல்கள் இல்லை!
          பட்டுப் பூச்சியும் பிடிக்கவில்லை!!
பிடித்துச் செல்ல உன் கைகள் இல்லை!
          கடற்கரை நடையும் பிடிக்கவில்லை!!
உன் உளறல் சத்தம் அருகில் இல்லை!
          பேருந்து பயணம் பிடிக்கவில்லை!!
உன் இரவுப் பேச்சு கேட்கவில்லை!
          இரவே எனக்கு பிடிக்கவில்லை!!
படுத்து உறங்க உன்மடி இல்லை!
          உறக்கம் கூட பிடிக்கவில்லை!!
உயிரென கலந்த நீயும் இல்லை!
          உலகம் எதுவும் பிடிக்கவில்லை!!
பிடிக்கவில்லை எனக்கு பிடிக்கவே இல்லை!
          நீ கனவில் வருவது பிடிக்கவில்லை!!
கனவில் மட்டும் என்னுடன் வாழ
          கனவே எந்தன் வாழ்வா என்ன?

************************************************

enayae paarkum un kangal illai!
        mayilin nadanam pidikkavillai!!
alaiyena paayum un koonthal illai!
        kadalin alaiyum pidikkavillai!!
pattupol theendum un viralgal illai!
        pattu poochiyum pidikkavillai!!
pidithu chella un kaigal illai!
        kadarkarai nadaiyum pidikkavillai!!
un ularal sattham arugil illai!
        perunthu payanam pidikkavillai!!
un iravu pechu ketkavillai!
        irave enakku pidikkavillai!!
padutthu uranga unmadi illai!
        urakkam kooda pidikkavillai!!
uyirena kalantha neeyum illai!
        ulagam ethuvum pidikkavillai!!
pidikkavillai enakku pidikkave illai!
        nee kanavil varuvathu pidikkavillai!!
kanavil mattum ennudan vaazha
        kanave enthan vaazhva enna?