உன்னை கையில் ஏந்தவில்லை..
கட்டி அணைக்கவில்லை..
உன் பட்டு போன்ற கைகள் என்னை தீண்டவில்லை..
உன் பிஞ்சு கால்களில் முத்தமிடவில்லை..
என் பால் மடியும் சுரக்கவில்லை..
என்ன துர்பாக்கியம் செய்தேனோ
என்னை நீங்கிச் சென்றாய்..
என் உயிரே என் செல்வமே
என்னை விட்டுப் பிரிந்தாய்..
என்றும் மறவேன் உன்னை
என் நெஞ்சில் அழியா வண்ணச் சித்திரமாய்..
மீண்டும் வருவாய் என காத்திருக்கிறேன்..
எனை தாயென முழுமையடையச் செய்வாய் என காத்திருக்கிறேன்..!!!
~ பிரியங்கா செல்வகுமார்
உன் பிஞ்சு கால்களில் முத்தமிடவில்லை..
என் பால் மடியும் சுரக்கவில்லை..
என்ன துர்பாக்கியம் செய்தேனோ
என்னை நீங்கிச் சென்றாய்..
என் உயிரே என் செல்வமே
என்னை விட்டுப் பிரிந்தாய்..
என்றும் மறவேன் உன்னை
என் நெஞ்சில் அழியா வண்ணச் சித்திரமாய்..
மீண்டும் வருவாய் என காத்திருக்கிறேன்..
எனை தாயென முழுமையடையச் செய்வாய் என காத்திருக்கிறேன்..!!!
~ பிரியங்கா செல்வகுமார்
No comments:
Post a Comment
I don't know what you think about my creation, but every word of you help me grow better and stronger!!